தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காட்பாடி அருகே முதியவர் மீது மோதிய கார்! (சிசிடிவி காட்சி)

காட்பாடி அருகே அதிவேகத்தில் வந்த கார் முதியவர் ஒருவரை இடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2022, 10:30 am

DIN

காட்பாடி அருகே அதிவேகத்தில் வந்த கார் முதியவர் ஒருவரை இடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ் வடுகன்குட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தின் எதிரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5 மணியளவில் மது அருந்திய முதியவர் சாலையின் இருபுறமும் கவனிக்காமல் சைக்கிளில் சாலையைக் கடந்தார். அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி அதிவேகமாக வந்த கார் முதியவர் மீது மோதியது. 

அதன் பின்பு சற்று நேரத்தில் அங்கிருந்து எழுந்த முதியவர் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரான வெங்கடேசபுரத்தை நோக்கி பயணித்தார்.

சுமார் 20 நிமிடமாக அங்கிருந்த கார் ஓட்டுநர், முதியவர் எழுந்து சென்ற பின்பு தானும் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஆனால் இந்த விபத்து குறித்து இதுவரை காட்பாடி காவல்நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை.

கார் மோதிய விபத்தில் முதியவர் உயிர் பிழைத்து எழுந்து சென்றது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.