சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
சென்னையில் அடுத்த 3 மணி மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் அடுத்த 3 மணி மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மாலை 7 மணி வரை அயனாவரம், எழும்பூர், மயிலாப்பூர், புரசைவாக்கம், வாலாஜாபேட்டை, அம்பத்தூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...