ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: நன்னடத்தை சான்று பெற காவல்நிலையம் முன் குவிந்த இளைஞர்கள்

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழை பெற இரவில் காவல் நிலையத்தின் முன்பு  இளைஞர்கள் குவிந்தனர்.
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: நன்னடத்தை சான்று பெற காவல்நிலையம் முன் குவிந்த இளைஞர்கள்
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: நன்னடத்தை சான்று பெற காவல்நிலையம் முன் குவிந்த இளைஞர்கள்

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழை பெற இரவில் காவல் நிலையத்தின் முன்பு  இளைஞர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் சான்றிதழ் வழங்கிய காவல்துறையினர்.

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது நாளை அதிகாலை முதல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு விளையாட்டு அரங்கில் இன்று முதல் 30.11.2022 வரை நடைபெற உள்ளது. 

இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிலையில் ஆள் சேர்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்கள் கட்டாயம் காவல் நிலையத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் எனக் கூறியதால் ஆன்லைன் மூலமாகவும், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் 24 மணி நேரமும் நேரடியாகவும் நன்னடத்தை சான்றை பெற்றுக்கொள்ளலாம் என வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணண் கூறியதை அடுத்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சான்றிதழ் பெற குவிந்தனர். 

இதேபோல் பாகாயம், குடியாத்தம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இளைஞர்கள் குவிந்தனர். முன்னதாக வழக்கறிஞர் அஃபிடவிட் மட்டும் போதும் என இளைஞர்கள் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம் என்பதால் இளைஞர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். 

மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் (செல்ஃப் போலீஸ் வெரிஃபிகேஷன்) நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com