தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம்: சேகர்பாபு

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 

News image
Updated On :16 நவம்பர் 2022, 1:28 pm IST

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து டிச. 27-ஆம் தேதியன்று மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. 

இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் மையமானது இன்று முதல் அடுத்த வருடம் ஜனவரி 20-ம் தேதி வரை செயல்படும். மேலும், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999-ஐ பயன்படுத்தி சந்தேகங்களை அறிந்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.