எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!

தன் ரசிகையின் கடிதத்திற்குப் பதிலளித்த விஜய்...

News image

விஜய்

Updated On :19 ஜூன் 2026, 12:52 pm IST

1996-ல் ரசிகையின் உணர்வுப்பூர்வமான கடித்தத்திற்குத் தற்போதையை முதல்வர் விஜய் அளித்த பதில் கடிதம்.

என் இளைய தளபதியே...

சாதாரணமாக உங்கள் ரசிகைகள் அனைவரும் உங்களின் அழகை பற்றியே கடிதம் எழுதுவார்கள். ஆனால், இந்த ரசிகையிடம் கொஞ்சம் வித்தியாசம்... அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?

உங்களிடத்தில் எனக்கு பிடித்தது எத்தனையோ... உங்களின் இனிமையான குணம், அடக்கமான பண்பு, இனிமை அமைதியான முகம், இனிமையான கண்கள், அப்பா அம்மாவிடம் அன்பாக இருப்பது, மேலும் இத்தனை வெற்றி படங்களில் நடிப்பது, உங்களை பற்றி ஒரு கிசு கிகவும் வராமல் உங்களுடைய தொழிலில் ஒழுங்கோடும் முறையோடும் இருப்பது.

உன்னைப் பற்றி பத்திரிகையில் வரும் செய்திகளைப் படிக்கும் போது உன் அம்மா மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்க்கு... நடனம் என்று சொல்லப் போனால் உங்கள் நடனம் மட் டுமே பிடிக்கும் தேவா படத்தில்,

"ஒரு கடிதம் எழுதினேன், அதில் என் உயிரை அனுப்பினேன்," என்ற பாட்டில் நீ செய்யும் குறும்புகளும், பாடிக் கொண்டே வந்து ஓடையில் குதிப்பதும், அந்த தண்ணீர் உன் காதலியின் முகத்தில் படுவதும், நான் பலமுறை பார்த்து ரசித்தேன். நீயும் உன் அப்பாவும் சேர்ந்தால் குறும்புக்கு எல்லையே இருக்காது.. என்று நினைக்கிறேன்.

நீ ரொம்பவும் கொடுத்து வைத்தவர். இல்லையேல் இப்படி ஒரு அப்பா கிடைத்திருப்பாரா..?

இப்படிக்கு,

உன் ரசிகை,

த. ஜனனி BA, திருச்சி.

பின் குறிப்பு:- ஒரு முழு நாளில் உன் சுகமான நேரம் எது..? பதில் கொடுக்கவும்.

-------

அன்புள்ள ஜனனி....

நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். பணம் சம் பாதிப்பது முக்கியமல்ல; நல்லவன் என்ற பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த வேதம்.

நான் எனக்காக எந்த சொத்தும் (Property) சேர்க்க ஆசைப்படவில்லை. காரணம், எனக்காக கடவுள் கொடுத்திருக்கும் பெரிய சொத்து, ஆஸ்தி, என் பெற்றோர்கள்தான் . ஒரு நாள் முழுவதிலும் என் சுகமான நேரம் எது...? என்று நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பதில் இதுதான்.. நாள் முழுவதும் ஷுட்டிங்கில் உழைத்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் என்னுடைய அம்மா மடியில் தலை வைத்துப்படுக்கும் அந்த இரண்டு நிமிடங்கள்தான் எனக்கு சுகமான நேரம்.

உங்களிடமும் நான் அதைத்தான் சொல்கிறேன். கடவுள் எல்லா இடத்திலும் எல்லார் கண்களிலும் தெரிவதில்லை என்ற காரணத்தால்தான் தாயைப் படைத்திருக்கிறான். தாயை நேசிக்கிறவன் கடவுளை நேசிக்கிறான் என்று கூறுவார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் எழுதியது போல் நான் கொடுத்து வைத்தவன்தான்.

அன்புடன்,

விஜய்.

சினிமா எக்ஸ்பிரஸ் நவ.1, 1996 தீபாவளி மலரில் வெளியான கடிதம்.

The reply letter sent by Chief Minister Vijay to a female fan's heartfelt letter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.