/

ஆணழகனே, உன் வாசல் வந்திட வேண்டும்... ரசிகைக்கு விஜய்யின் பதில்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... ரசிகர்களுக்கு விஜய் அனுப்பிய கடிதங்கள் குறித்து...

News image

விஜய்

Updated On :18 ஜூன் 2026, 6:00 pm IST

1996-ல் ரசிகையின் காதல் கடித்தத்திற்குத் தற்போதையை முதல்வர் விஜய் அளித்த பதில் கடிதம்.

டியர் விஜய்,

மனிதப் பிறப்பிலே ஒரு சாதாரண இளம் வாலிபனுக்கு இத்தனை பட்டமா? ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன்... ரசிகனை மணக்க ஒரு சந்திரலேகா... சந்திரலேகாவை மணக்க ஒரு பூவே உனக்காக... கோயமுத்தூர் மாப்பிளையை மணக்க ஒரு பாண்டி, பாண்டியை மணக்க நாளைய தீர்ப்பு... பூவே உனக்காக படம் நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். எதுவென்று தெரியாமல் காத்துக் கொண்டிருப்பது வசந்த வாசல்.

நடிப்பில் - ரசிகன்

சிரிப்புல - தேவா

பாட்டுல - விஷ்ணு

படிப்புல - மாண்புமிகு மாணவன்

குறும்புல - விஜய்

உன்னைப் பார்த்த நாளில்தான் கண்ணில் இமைகள் தோன்றியது.

உந்தன் பேரைச் சொல்லித்தான் எந்தன் பாஷை தோன்றியது.

இதயத்தில் சுவாசங்கள் இல்லை

தென் பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்.

நீங்கள் நடித்த படத்தில் நான் ரொம்ப விரும்பிப் பார்த்தது ‘பூவே உனக்காக’. எந்தப் படத்திலும் எந்த நடிகரும் நடிக்காத ஒரு கேரக்டரில் நீங்கள் நடித்தது நான் ஒரு கணம் என்னையே மறந்து ரசித்தேன். ஆணழகான நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். நான் உங்கள் அழகை ரசிக்க வேண்டும். உங்கள் அம்மா அழகாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்றதுபோல் நீங்கள் மிக மிக அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லா படத்திலும் ஒரு ஸ்டைல் பண்ணுவீர்கள், அந்த ஸ்டைல் சூப்பர். அடுத்து என்ன படம் நடிப்பீர்கள்? உங்கள் பாட்டை நான் ரொம்பவும் ரசிப்பேன். உங்கள் குரல் அழகான குரல், டான்ஸ் சூப்பர், நடிப்பு அருமை. அழகில் ஆணழகன்.

இப்படிக்கு,

உன் கிரிஷா,

சமயநல்லூர்.

-------------------

அன்புள்ள கிரிஜா...

எனக்கு கிடைக்கும் அத்தனைப் பட்டங்களும் உங்களைப் போன்ற ரசிகைகளால்தானே... இந்த ரசிகனை ரசித்த ரசிகையே...‘பூவே உனக்காக’ என்று பூ கொடுத்தேன். தீபாவளிக்கு உனக்கு நான் செல்வா. பிறகு உன் பாராட்டுக்காக ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’. பிறகு என்றாவது ஒருநாள் நீ என்னை சந்திக்க வருவாய், நாம் சந்திப்போம். ‘நேருக்கு நேர்’.

Story image

பூவே உனக்காக படத்தில் நான் பாடிய பாடிய பாட்டை வைத்து (ஆனந்தம் ஆனந்தம் பாடும்) எனக்கு கடிதம் எழுதிவிட்டாய். உண்மைதான். நம் நட்பு என்றும் சொந்தம். அது நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் என்று நேசிக்கிறேன். உங்கள் ஒவ்வொரு வரிகளும் என்னைப் பாராட்டிக்கொண்டே இருக்கிறது. என் மீது உங்களுக்கு உள்ள அன்புக்கு நான் அடிமை.

அன்புடன்,

விஜய்

சினிமா எக்ஸ்பிரஸ் நவ.1, 1996 தீபாவளி மலரில் வெளியான கடிதம்.

A reply letter sent by the current Chief Minister Vijay in 1996 to a female fan's letter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.