ஒசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 53,000 பேரை பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஒசூரில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, ஒசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமையவுள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தில்லியில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டார். அப்போது, புதிய ஐபோன் தொழிற்சாலையில் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்களில் 6,000 பணியாளா்கள், ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

