இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கனமழை: தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2022, 7:48 am

DIN

நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 19-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என்பதால் வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக, மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கும்பகோணத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.