மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை கார் நிறுத்த பகுதியில் நகைக் கடை பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காரமடை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் டைமண்ட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை கார் ஸ்டேண்ட் பகுதியில் சோலையன் ஜுவல்லரி என்ற பெயரில் 13 ஆண்டுகளாக தனியாக நகைக் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் திறந்து இருப்பதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
_.jpeg)
இதையடுத்து சாந்தாமணி மற்றும் செந்தில் ஆகியோர் கடைக்கு உடனடியாக விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த அரை கிலோ எடைக்கு மேல் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து காரமடை காவல்துறை ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடையில் ஆய்வு செய்தனர்.

மேலும் கடைக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
_.jpeg)
காவல்நிலையம் அருகில் இருந்தும், கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் இருக்கும் என தெரிந்தும் இக்கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரப் பிரதேசம்: ரயில் தண்டவாளத்தில் இருந்து மல்யுத்த வீரர் சடலமாக கண்டெடுப்பு

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


