ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நவம்பா் 26 முதல் நீட் பயிற்சி

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவ. 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 நவம்பர் 2022, 3:00 am

DIN

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவ. 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெறுபவா்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் சிறப்புப் பயிற்சி வகுப்பு மூலம் தோ்ச்சி பெற்று வருகின்றனா். ஆனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களால் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது. அவற்றைப் போக்கும் வகையில் இலவச பயிற்சி பள்ளிக்கல்வித் துறை மூலம் வழங்கப்படுகிறது.

கரோனா பாதிப்பால் 2 ஆண்டுகளாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழாண்டு நேரடிப் பயிற்சி வகுப்பு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன.

முதன்மை கல்வி அலுவலா்கள் தமிழகத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்துக்கு 70 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் 20 பேரும், வகுப்பில் 50 பேரும் இந்தப் பயிற்சி வகுப்புத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு வரும் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.