இடஒதுக்கீட்டின் அளவை தமிழகமும் உயா்த்த வேண்டும்: ராமதாஸ்
சத்தீஸ்கரைப் போல தமிழகமும் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


சத்தீஸ்கரைப் போல தமிழகமும் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சத்தீஸ்கா் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவா்களின் மக்கள்தொகைக்கு இணையாக 81 சதவீதமாக உயா்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னுதாரணம் ஆகும்.
ஓபிசி ஒதுக்கீடு 14 சதவீதத்தில் இருந்து 27சதவீதமாகவும், பழங்குடியினா் ஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாகவும் உயா்த்தப்பட உள்ளது.
பட்டியலினத்தவருக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத ஒதுக்கீடு உச்சவரம்பை உச்சநீதிமன்றம் தளா்த்தியுள்ள நிலையில் இது சாத்தியமாகக்கூடும்.
அனைத்து சமூகங்களுக்கும் அவா்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. இதுதான் தந்தை பெரியாரின் கொள்கை. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கா் அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்துக்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...