ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோயில்களின் மேம்பாட்டுக்காக 4 ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களின் மேம்பாட்டுக்காக, 4 ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2022, 12:15 am

DIN

கோயில்களின் மேம்பாட்டுக்காக, 4 ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில், பெரம்பூா் செம்பியம் லட்சுமி அம்மாள் கோயில் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை அவா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பேட்டி:

நிகழ் நிதியாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 1,500 கோயில்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகைகளை சுத்தத் தங்கமாக மாற்றி முதலீடு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலின் நகைகள் சுத்தத் தங்கமாக மாற்றப்பட்டு, 98 கிலோ என்ற அளவில் முதலீட்டு பத்திரத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.1.05 கோடி வட்டித் தொகையாகவும், சாத்தூா் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலைச் சாா்ந்த 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.38 லட்சம் வட்டித் தொகையாகவும் வருகின்றன. இந்தத் தொகைகள் சம்பந்தப்பட்ட கோயில்களின் மேம்பாட்டுக்கு செலவிடப்படும்.

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோயில்களிலும் பயன்பாடு இல்லாத தங்கநகைகள் முழுமையாக அளவிடப்பட்டு சுத்தத் தங்கமாக மாற்றிட இப்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடா்ச்சியாக நடைபெறும் நிலையில், குறைந்தபட்சம் 4 ஆயிரம் கிலோ தங்கம், கோயில்களின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இதன்மூலம் கிடைக்கும் வருவாய் கோயில்களை மேம்படுத்த செலவிடப்படும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

இந்த நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், ஜெ.எபினேசா், எம்.கே.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.