
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகினர்.
சேகர் என்பவரின் மளிகைக் கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி பலியாகினர். விஷவாயு தாக்கியதில் மணிகண்டன் (35), ஐயப்பன் (36) ஆகியோர் பலியானதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் தீயனைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 பேரையும் மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








