
வேலூர்: இனம் வேறு என்றாலும் தாய்மை ஒன்று தான் என்பதை நிரூபித்துள்ளது குரங்கு ஒன்று. ஆதரவற்ற நாய்க்குட்டிக்கு தாயாக மாறி பாலுட்டி வளர்த்து வருகிறது இந்தக் குரங்கு.
குரங்கு மற்றும் நாய்க்குட்டிக்கு இடையேயான பாச பினைப்பினைப் பார்ப்பவர்கள் நெகிழ்ச்சியடைகிறார்கள்.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் குரங்கு ஒன்று ஆதரவற்ற நாய்க்குட்டி அரவணைத்து வளர்த்து வருகிறது. இக்குரங்குக்குப் பிறந்த குட்டிகள் அனைத்தும் இறந்துவிட்டதாகவும், இதனால் சாலையில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நாய்க்குட்டி ஒன்றை அக்குரங்கு தனது குட்டியாகவே பாவித்து அரவணைத்து வளர்க்க தொடங்கியிருக்கிறது.
அதற்கு பாலூட்டி குரங்குக் குட்டியைப் போன்று வயிற்றில் வைத்துக்கொண்டே யாரும் அதை நெருங்காதவாறு பாதுகாத்து வருகிறது.
இதையும் படிக்க.. ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?
அதேபோல் அந்த நாய்க் குட்டியும் குரங்கிடமே பால் குடித்து மிகுந்த பாசத்தோடு வளர்ந்து வருகிறது. இக்குரங்கு அங்குள்ள பொது மக்களிடமும் பாசமாக பழகி வருகிறது. அவர்கள் இக்குரங்கிற்குத் தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிக்க.. மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு
இனம் வேறு என்றாலும் தாய்மை ஒன்றுதான் என்பதை உணர்த்தும் இக்குரங்கின் செயலையும், குரங்கு மற்றும் நாய் குட்டியின் அளவில்லா பாசப் பிணைப்பும் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.