47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 12,521 அதிகரித்துள்ளது. 

News image
மேட்டூர் அணை நீர்வரத்து 12,521 கன அடியாக உயர்வு
Updated On :28 நவம்பர் 2022, 3:05 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,521 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை  மாலை வினாடிக்கு 12,347  கன அடியாக இருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 12,521 அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமை காலை 119.21அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.21 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.