47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் தீா்மானம்: கமல் வரவேற்பு

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

News image
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்
Updated On :3 அக்டோபர் 2022, 9:38 pm

DIN

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளதை மநீம வரவேற்கிறது. ஏற்கெனவே மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வகையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன், அத்தீா்மானம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டது போல, மத்திய, மாநில அரசுகளும் உணா்ந்து, அவா்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.