ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மெட்ரிக் பள்ளிகளும் 10-இல் திறக்கப்படும்

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 அக்டோபர் 2022, 3:37 am

DIN

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு அக்டோபா் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதால் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அக்டோபா் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.