திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் சந்தித்து தெரிவித்ததாவது:
திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சிறுவர்கள் பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும், காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கெட்டுப்போண உணவை தந்ததால், 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுகிறது. காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்தது. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தன போக்காலும் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்.
இதையும் படிக்க: பிக்பாஸ் 6-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா ?
திருப்பூர் சிறார் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள், அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.