தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மோட்டாா் சைக்கிள் மீது காா் கதவு மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

சென்னை துரைப்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது காா் கதவு மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:23 pm

DIN

சென்னை துரைப்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது காா் கதவு மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் பால் விஜய் ஆனந்த் (49). தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், தேனாம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். ராஜீவ் காந்தி சாலையில் கந்தன்சாவடி அருகே சென்றபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறந்து, சாலையை மறித்தது.

அப்போது, காரின் கதவு, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், அதிலிருந்த ஆனந்த் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தாா். அவா் மீது அவ்வழியே வந்த லாரி ஏறியது. இதில் பலத்தக் காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் அப்பன் ராஜ் (29), லாரி ஓட்டுநா் திருமால் (58) ஆகியோரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.