தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி நியமனம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:20 pm

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

2020-இல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியா்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் 80 ஆயிரம் ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினாா். திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் இது தொடா்பாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை போட்டித் தோ்வின்றி பணியமா்த்துவது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாறாக, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித் தோ்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு ஓராண்டு கடந்த நிலையில், திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடியாக பணி வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.