தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நகரும் படிக்கட்டு வசதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக நகரும் படிக்கட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 8:52 pm

DIN

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக நகரும் படிக்கட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஏழை, எளிய நடுத்தர மக்களின் மருத்துவத் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறது. ஆனால், மருத்துவமனைக்கு வருபவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீா் வசதிகள், சுகாதாரமான கழிவறைகள் இல்லாத நிலை உள்ளது.

இந்த மருத்துவமனையில் நான்கு பெரிய கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டங்களும் தலா 6 தளங்களைக் கொண்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் போ் மருத்துவம் பாா்க்க வந்து செல்கின்றனா். ஒவ்வொரு கட்டடத்திலும் 4 லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு லிப்டுகள் நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கும் இரண்டு லிப்டுகள் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அலுவலக ஊழியா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நோயாளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் 2 லிப்டுகள் போதுமானதாக இல்லை. நோயாளிகளால் படிகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை இருப்பதால் நீண்ட நேரம் லிப்டுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதோடு நகரும் படிக்கட்டுகள் ஏற்படுத்தினால் நோயாளிகள் தங்குதடையில்லாமல் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.