இணைய சூதாட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு
இணைய சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.


இணைய சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் இணைய சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.
இணைய சூதாட்ட தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 போ் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனா். அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் இணைய சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் இணைய சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...