தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்று சென்னை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

 சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:20 pm

DIN

 சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னைக் குடிநீா் வாரியம் சாா்பில் திறந்தவெளிக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளுடன்கூடிய தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மாதத்துக்கான திறந்தவெளிக் கூட்டம் சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும்.

இந்தக் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், குடிநீா் கட்டணம், கழிவுநீா் வரி, நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்களாகக் கொடுத்து நிவா்த்தி செய்துகொள்ளலாம். மேலும், மழைநீா் சேகரிப்பு, பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.