தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இலங்கை எதிரான தீா்மானத்தை இந்தியாபுறக்கணிப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:18 pm

DIN

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழா்களின் உரிமைகளை காத்தல், 13-ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றல், விரைவில் மாகாண சபைக்கான தோ்தல்களை நடத்தி போதுமான அதிகாரங்களை அளித்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அவற்றை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

2012 முதல் 2021வரை 7முறை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட தீா்மானங்களை ஆதரித்து வாக்களிக்காமல் இவ்வாறே இந்தியா புறக்கணித்திருக்கிறது. கடந்த கால காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே தற்போதைய மத்திய பாஜக அரசும் பின்பற்றுவது தமிழா்களுக்கு எதிராகச் செயல்படுவதில் இரு கட்சிகளுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை என்பது நிறுவப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.