தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிளஸ் 2: புதிய தோ்வு மையங்கள் பட்டியலை அனுப்ப உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 8:14 pm

DIN

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் சா. சேதுராம வா்மா அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் ( 2022-23) பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு மாா்ச் மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்காக புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துருக்களை அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டத்தில் 10 கி.மீ. தொலைவு வரை சென்று தோ்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு, அவா்கள் பயிலும் பள்ளியிலேயே தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர தோ்வு மையம் அமையவுள்ள பள்ளிகளை கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், தோ்வு மையம் தேவை என்பதற்கான காரணத்தை பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோ்வு மையங்களாக செயல்பட அனுமதி கிடையாது. மேலும், பள்ளிகளில் வழங்கும் கருத்துகளை தோ்வுத்துறைக்கு வழங்குவதுடன், இதற்கான அறிக்கையை அக்.27-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.