தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு (பிஎன்ஒய்எஸ்) இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 8:16 pm

DIN

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு (பிஎன்ஒய்எஸ்) இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது.

ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சுகாதாரத் துறை இணையதளத்தின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை இருப்பதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியா் மூலமாக அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை, சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற இருப்பதால், நீட் தோ்வில் தோ்ச்சியடையாதவா்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற பலா் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.