பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 8:18 am

DIN

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Story image

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு கட்டு கட்டாக 2,000 ரூபாய் போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய  மூன்று பேரை  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2,000 ரூபாய்  நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப், 4 மொபைல் போன்களை  போலீசார் பறிமுதல்  செய்தனர்.

Story image

இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.