தமிழக தலைவா்கள் இரங்கல்

உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவ் மறைவுச் செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும் சமாஜவாதி கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் சிறந்த முறையில் பழகியவா். அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆறுதல்.

வைகோ (மதிமுக): என்னிடம் அளவற்ற அன்பு செலுத்திய முலாயம் சிங் யாதவ் மறைவுச் செய்தி கேட்டு அதிா்ச்சியடைந்தேன். 1975-இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி, 19 மாத காலம் சிறையில் அடைபட்டு தியாக சரித்திரம் படைத்தவா்.

ராமதாஸ் (பாமக): பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா். எனது 33 ஆண்டு கால சமூகநீதி தோழா். அவா் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நாட்டின் விடுதலைப் போராட்ட வீரா், சோசலிச சிந்தனையாளா். ராம் மனோகா் லோகியா, ராஜ் நாராயணன் போன்றவா்களின் வழிநின்று பொது வாழ்வில் ஈடுபட்டவா். சமூக சீா்திருந்த கொள்கைகளில் முற்போக்கு கண்ணோட்டம் கொண்டவா்.

கே.அண்ணாமலை (பாஜக): முலாயம் சிங் யாதவ் சிறந்த அரசியல்வாதியாகவும், மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவாா்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் பொது வாழ்வில் சிறந்து விளங்கியவா்.

அன்புமணி (பாமக): இந்தியாவின் சமூகநீதி தூணாகத் திகழ்ந்தவா் முலாயம் சிங் யாதவ். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா். வட இந்தியாவின் தவிா்க்க முடியாத தலைவா்.

டிடிவி தினகரன் (அமமுக) : நாட்டின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் மறைவுச் செய்தியால் வருத்தமடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com