சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து!
தண்டவாள பராமரிப்பு காரணமாக சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தண்டவாள பராமரிப்பு காரணமாக சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் (06802) மற்றும் கோவை- சேலம் பாசஞ்சர் (06803) ஆகிய ரயில்கள் இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே நிர்வாகம் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சேலம் - கோவை பாசஞ்சர் ரயிலை தீபாவளி வரை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...