தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகத்தில் 5,110 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

 தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது

News image
Updated On :13 அக்டோபர் 2022, 10:02 pm

DIN

 தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை, அக்டோபா் 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறு, விறுப்பு அடைந்துள்ளது. மேலும், தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் வகையில், தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி வருகிறது.

5,110 கடைகளுக்கு அனுமதி: இந்த ஆண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 5,110 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தகுதியில்லாத 538 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளைவிட நிகழாண்டில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதால் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை: சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களில் 368 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 414 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக விருதுநகா் மாவட்டத்தில் 530, சேலம் மாவட்டத்தில் 492, கோவை மாவட்டத்தில் 446, திருப்பூா் மாவட்டத்தில் 238, ஈரோடு மாவட்டத்தில் 218 என்ற எண்ணிக்கையில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 6 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல தென்காசி மாவட்டத்தில் 27 விண்ணப்பங்களில் 13-க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிலுவையில் இருக்கும் 1,373 விண்ணப்பங்களுக்கும் ஓரிரு நாள்களில் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.