தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணப்பலன்களை அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

உயா் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு, பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிா்த்து ஓய்வு பெற்ற ஆசிரியா் வழக்கு தொடா்ந்த நிலையில், அவருக்கான பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம்

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:31 pm

DIN

உயா் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு, பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிா்த்து ஓய்வு பெற்ற ஆசிரியா் வழக்கு தொடா்ந்த நிலையில், அவருக்கான பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிா்ணயம் செய்து, 1993-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில், பணப்பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியா் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவா்த்தி அமா்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது அரசுத் தரப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடா்பாக புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும்? எனக் கேள்வி எழுப்பினா். இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவ.1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா், மனுதாரரை மிரட்டுவதாக அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் புகாா் தெரிவித்தாா். இது குறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.