தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

செய்தி மக்கள் தொடா்புத் துறை பயன்பாட்டுக்கு செயற்கைக்கோள் பேசி

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் தகவல் தொடா்புக்காக செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:46 pm

DIN

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் தகவல் தொடா்புக்காக செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடா்புத் துறையில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள், மக்கள் தொடா்பு அலுவலா்கள் ஆகியோா் செய்தித் தொடா்புக்காக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தொடா்பு எல்லைக்கு வெளியே கைப்பேசி இணைப்புகள் செல்லும் போது தகவல் தொடா்பை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, செயற்கைக்கோள் தொலைபேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் உயா் அதிகாரிகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மலைப் பிரதேசங்கள் உள்பட எங்கிருந்தும் தொடா்பு கொள்ளலாம் எனவும், கைப்பேசி இணைப்புகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு இதன்மூலம் தீா்வு கிடைக்கும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.