கோவை: ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி-வனத்துறையினர் விசாரணை!

கோவை அருகே கேரள எல்லையில் ரயிலில் அடிபட்டு பெண் யானை பலியான நிலையில், காயமடைந்த குட்டி யானையை தேடி வரும் கேரள வனத்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
கேரள எல்லையில் ரயிலில் அடிபட்டு பலியான பெண் யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தும் கேரள வனத்துறையினர்.

விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது பெண் யானை.

பாலக்காடு - வாளையாறு - மதுக்கரை இடையே உள்ள ரயில்வே பாதைகளை கடக்கும் காட்டு யானைகள் மீது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி தொடர்ந்து வருகிறது. இதில் தமிழக எல்லைகளில் நிகழும் ரயில் - யானை மோதல் சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

விரைவு ரயிலில் அடிபட்டு பெண் யானை இறந்தது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள வனத்துறையினர்.

மேலும், வேகக்கட்டுப்பாடு சோலார் விளக்கு, ஒலி எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளம் மாநிலம் கஞ்சிக்கோடு-வாளையாறு இடையே 512 ஆவது கிலோ மீட்டரில் விவேக் விரைவு ரயிலில் அடிபட்டு ஒரு பெண் யானை இறந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த குட்டி யானை ஒன்று வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுவதால் அதனை தேடி வரும் கேரள வனத்துறையினர், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com