2020 இல் 80% இந்தியர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: உலக வங்கி அறிக்கை!

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகளவில் ஏழைகளாக மாறியவர்களில் 80% பேர் இந்தியர்கள் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகளவில் ஏழைகளாக மாறியவர்களில் 80% பேர் இந்தியர்கள் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை குறித்து இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தரவு இல்லை எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 

கரோனா பெருந்தொற்றால் 2020 ஆம் ஆண்டில் வறுமையில் ஏழைகளாக மாறியவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கியின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் அந்த ஆண்டு உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உலகளவில், தீவிர வறுமை விகிதம் 2019 இல்  2019 இல் 8.4% ஆக இருந்தது, 2020 இல் 9.3% ஆக உயர்ந்தது, இது பல தசாப்தங்களில் உலகளவில் வறுமை ஒழிப்பு திட்டங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தது. 2020 இறுதிக்குள் 7 கோடி பேர் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர், இது உலகளாவிய மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கையை 70 கோடிக்கும் அதிகமாகவும் அதிகரிக்கவும் செய்தது. உலகளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் சீனாவின் நிலை எதிர்மறையாகவே உள்ளது.

வறுமை குறித்து இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தரவு இல்லாதது உலகளவிலான மதிப்பீடுகளை தயாரிப்பதில் ஒரு தடையாக மாறியுள்ளது என்று உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. 2011 முதல் வறுமை குறித்த தரவுகளை இந்திய அரசு வெளியிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. 

அதிகாரப்பூர்வ தரவு இல்லாததால், உலக வங்கி இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் நுகர்வோர் பிரமிடுகள் குடும்ப ஆய்வு (சிபிஹெச்எஸ்) கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை நம்பியிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

தனியார் தரவு நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், உத்தியோகபூர்வ தரவு இல்லாததால் இந்திய, பிராந்திய மற்றும் உலகளவிலான வறுமை நிலைகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தியதாக கூறியுள்ள உலக வங்கி, 2020 ஆம் ஆண்டிற்கான சிபிஹெச்எஸ் தரவுவுகளின் படி, 2020 ஆம் ஆண்டில் 5.6 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 2022 இல் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 2020 ஆம் ஆண்டில் 2.3 கோடி இந்தியர்கள் கூடுதலாக வறுமையில் தள்ளப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி தனது சொந்த ஆய்வறிக்கையில் இந்தியாவிற்கான சிபிஹெச்எஸ்  தரவைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தது ஏனெனில் இந்தியாவில் வறுமை அதன் சொந்த மதிப்பீடுகளை விட "கணிசமான அளவு அதிகமாக" உள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து வெளிவரும் தரவுகள் குறித்த குழப்பம், நரேந்திர மோடியின் அரசாங்கம் தயக்கம் காட்டுவது குறித்து நாடு முழுவதும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் சில காலமாக வெளிப்படுத்தப்பட்ட கூட்டு விரக்தியையும் கவலையையும் மீண்டும் முன்வைத்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளை வெளியிடுதல், வளர்ச்சி தலையீடுகளை மோசமாக பாதிக்கிறது.

எவ்வாறாயினும், மதிப்பிடும் முறையின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோரின் எண்ணிக்கை 2.3 கோடி முதல் 5.6 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும்,  உலக அளவில் உள்ள வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோரின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்துள்ளது என உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும், 2020 இல் தொற்றுநோய் தாக்கும் வரை வறுமை நிலைகள் கீழ்நோக்கிய பாதையைக் காட்டியது. இருப்பினும், இந்த தொற்றுநோய் "உலகளவில் வறுமை நிலைகளுக்கு வரலாற்று ரீதியாக பெரிய கூடுதலான" பாதிப்பை விளைவித்தாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 70 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலகளவில் 2019 இல் 8.4% ஆக இருந்த தீவிர வறுமை நிலைகள் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 9.4% ஆக அதிகரித்தது.

"2020 ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறித்தது என்றும், உலகளாவிய வருவாய் ஒருங்கிணைப்பின் சகாப்தம் உலகளாவிய வேறுபாட்டிற்கு வழிவகுத்தது. உலகின் மிக ஏழ்மையான மக்கள் தொற்றுநோய்களின் செங்குத்தான செலவுகளைச் சுமந்தனர். பணக்கார நாடுகளின் வருமானத்தை விட ஏழ்மையான நாடுகளில் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் மிக ஏழ்மையானவர்களின் வருமான இழப்புகள் உலகின் பணக்காரர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, மேலும் பல தசாப்தங்களில் முதல் முறையாக உலகளாவிய சமத்துவமின்மை உயர்ந்தது, ”அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. 

மேலும், உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு - காலநிலை மாற்றம் மற்றும் ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களால் அதிகரித்து - உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் "விரைவான வறுமை ஒழிப்பு நடவடிக்கைக்குத் தடையாக உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com