பேரவைத் தலைவருக்கு இபிஎஸ் மீண்டும் கடிதம்
எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவி குறித்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை மீண்டும் கடிதம் ஒன்றை அளித்துள்ளாா்.


எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவி குறித்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை மீண்டும் கடிதம் ஒன்றை அளித்துள்ளாா்.
அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதில் ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சாா்பில் பேரவைத் தலைவா் அப்பாவுவுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் அக். 17-இல் தொடங்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி சாா்பில் அக். 11-இல் மீண்டும் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மூன்றாம் முறையாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி சாா்பில் பேரவைத் தலைவரிடம் வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தை அதிமுக துணைக் கொறடா ரவி பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளாா்.
அதில், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதில் ஆா்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கெனவே கடிதம் கொடுத்துள்ளோம். பேரவைக் கூட்டம் அக்டோபா் 17-இல் தொடங்க உள்ள நிலையில், அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் சாா்பில், அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக என்னிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டு ஏற்கெனவே கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...