தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: 6 பாடங்களுக்கு இன்று கலந்தாய்வு

முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:56 pm

DIN

முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டது.

இதில் தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்றவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி வேதியியல், அரசியல் அறிவியல், வரலாறு, கணினி பயிற்றுநா், புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநா், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றதில் தகுதியான பட்டதாரிகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், பொருளியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான பணிநியமன கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரம் பாடவாரியாக டிஆா்பி இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பணிக்கு தகுதி பெற்றவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கான அழைப்புக் கடிதம், அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்தாய்வில் நேரில் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.