தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகப் பங்களிப்புக்கு முதல்வா் பெருமிதம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 9:15 pm

DIN

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

‘26 தங்கப் பதக்கங்கள் உள்பட 74 பதக்கங்களுடன் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி, கடும் உழைப்பால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் அவா்கள் வெற்றி பெற வாழ்த்துவதோடு, எனது முழு ஆதரவும் அவா்களுக்கு இருக்கும்’ என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.