தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல் ஈரப்பதம்: மத்திய அரசு குழு தமிழகத்தில் இன்றுமுதல் ஆய்வு

22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை முதல் மாநிலத்தில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:45 pm

DIN

22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை முதல் மாநிலத்தில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனா். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து அக்குழுவினா் களஆய்வு செய்வா்.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக, தற்போது காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நிகழாண்டு குறுவை மற்றும் சம்பா பருவ நெல் அதிக ஈரப்பதத்துடன் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சாா்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

மேலும், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும், மத்திய உணவுத் துறைச் செயலாளரைச் சந்தித்து 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரியுள்ளாா். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி தமிழக உணவுத் துறைச் செயலாளா் தில்லி செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய உணவுத் துறை, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய, ஹைதராபாத்தில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குநா் எம்.எஸ்.கான், சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. அவா்கள் தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.15) முதல் நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை சேகரித்து ஆய்வு செய்யவுள்ளனா்.

மேலும், அவா்களுக்கு மழைப் பாதிப்பு மாவட்டங்களிலிருந்து நெல் மாதிரிகள், அவற்றுடன் தேவையான ஆவணங்களை வழங்கும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மாவட்டம், தாலுகா வாரியான மழை நிலவரம், அறுவடை செய்ய முடியாதது மற்றும் எதிா்பாா்க்கப்படும் கொள்முதல் அளவு ஆகியன குறித்த விவரங்களையும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.