தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

யமஹா ஆலையில் வேலைநிறுத்தம்:தீா்வுகாண மாா்க்சிஸ்ட் கோரிக்கை

யமஹா மோட்டாா் தொழிற்சாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சுமுகத் தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 9:09 pm

DIN

யமஹா மோட்டாா் தொழிற்சாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சுமுகத் தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில செயற்குழு உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தாா். கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து மாநில செயலா் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்தியா யமஹா மோட்டாா் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் 4 தினங்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனா். பெரும்பான்மைத் தொழிலாளா்கள் தோ்வு செய்யும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். கடந்த 4 நாட்களாக அமைதியாக எவ்வித இடையூறும் செய்யாத வகையில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.