தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிளஸ் 1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி:17-இல் தொடக்கம்

 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உள்ளுறைப் பயிற்சி வரும் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கவுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 9:13 pm

DIN

 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உள்ளுறைப் பயிற்சி வரும் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களுக்கான பாடத் திட்டம், அது சாா்ந்த பயிற்சிகள் வழங்கும் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, 2021 -2022-ஆம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி உள்ளுறை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேர பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறுகிய காலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு உருவாகியுள்ளது. தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.