பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கடலில் மீன்பிடிக்கும்போது காரைக்கால் மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காரைக்கால் மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கியதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Published On :

காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காரைக்கால் மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கியதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அவரும், மணியன், மாதேஷ், சதீஷ், அய்யப்பன், மணிபாலன், அபிலேஷ்  ஆகியோர் வியாழக்கிழமை மாலை காரைக்கால்  மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகில் சென்றனர்.

கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு 4 படகுகளில் வந்த மர்ம  நபர்கள் தனசேகரன் படகை சுற்றிவளைத்து, படகில் ஏறி மீனவர்கள் மீது இரும்பு   கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படலிருந்த 7 பேரும் காயமடைந்தனர். மேலும் படகிலிருந்த பல்வேறு சாதனங்கள், கைப்பேசிகள், வலை உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நிலையில் 7  பேரும் காரைக்காலுக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தனர். குடும்பத்தினர், மீனவ  கிராமத்தினர் அவர்களை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.