சேலம்: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
கர்நாடகப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தற்போது 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று கூறியுள்ள அவர், ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

