பரந்தூர் விமான நிலையம்: 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்படுகிறது.


சென்னை: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்படுகிறது.
போராட்டக் குழுவினர், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அமைச்சர்கள் குழு உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு உள்ளிட்டோரை, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் இன்று காலை சந்தித்துப் பேசினர்.
பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் கொண்டுவரப்பட்டால், எங்களது புவியியல் பாதிப்பு விவசாயிகள் பாதிப்பு, பண்பாடு எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர்களிடம் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறினோம். இதையடுத்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில், புதிய விமான நிலையத்துக்கு எதிராக 13 கிராம மக்கள் 80 நாள்களாக நடத்தி வரும் அனைத்து விதமான போராட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...