அரக்கோணம்: நிகழ்மாத சம்பளத்தை இதுவரை தராததை கண்டித்து அரக்கோணம் நகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியார் ஓப்பந்த நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டு அந்நிறுவனத்தினர் 174 பணியாளர்களை பணியில் அமர்த்தி நகராட்சியின் 36 வார்டுகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் நிகழ்மாத சம்பளத்தை இதுநாள் வரை தரவில்லை என்றும், மாதந்தோறும் 20 ஆம் தேதிக்கு பிறகு தான் சம்பளம் தருவதாகவும், விடுமுறை நாட்களிலும் பணிபுரிய சொல்வதாகவும், அப்பணிக்கு தனி ஊதியம் தரமறுப்பதாகவும் கூறி ஓப்பந்த நிறுவனத்தை கண்டித்து நகராட்சி ஓப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஊழியர்கள் மா. கம்யூனிஸ்ட் கோட்ட செயலர் ஏ.பி.எம்.சீனிவாசன், நகரமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் சுகாதார அலுவலர் மோகன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரியில் அரிசி-சர்க்கரைக்கு பதில் பணம்: முதல்வர் அறிவிப்பு
இதனால் நகரில் திங்கள்கிழமை குப்பைகள் அள்ளப்படாத நிலையும், தெருக்கள் சுத்தம் செய்யப்படாத நிலையும் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


