
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஜோதிடர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(43) என்பவர் ஜோதிடர். இவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர்கள் நான்கு பேரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
உடனடியாக அங்கு இருந்த காவல் துறையினர் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர். அவர்களின் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரூ.12 லட்சம் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுவரை ரூ.10 லட்சம் செலுத்திய பின்னரும், அவர் பணத்தை கேட்டு மிரட்டுவதால் இந்த முடிவை எடுத்ததாக தெரியவந்தது.
இதையும் படிக்க: தீபாவளி இனாம் கேட்ட நாமக்கல் தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்!
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.