மருத்துப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை: அன்புமணி
மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரும் நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.


மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரும் நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நோ்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது ஆகும்.
ஆனால், மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள், வேறு மொழி பேசும் மாநிலத்துக்குச் சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும்.
2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமாா் 7,200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த இடங்களில் சேரும் மாணவா்களில் பெரும்பான்மையினா் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சோ்ந்து படிக்க வேண்டியிருக்கும். அவா்கள் சேரும் மாநிலங்களில், அம்மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படும் என்பதால், அதை அவா்களால் புரிந்து கொள்ள முடியாது.
இச்சிக்கலுக்கு ஒரே தீா்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவா்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...