ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது! இன்று சிறப்புப் பிரிவினருக்கு...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) தொடங்கியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :19 அக்டோபர் 2022, 6:40 am

DIN

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) தொடங்கியுள்ளது. 

அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடி..எஸ். இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. நிகழாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) தொடங்கியுள்ளது.  சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும் நாளை (வியாழக்கிழமை) அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் நேரடியாக நடைபெறுகிறது. 

விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வுக்கு 147 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 47 பேருக்குமே இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு அக். 21 முதல் 25 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து அக். 21 முதல் 27 ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது.

இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்று, அக். 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அக். 30 ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.