நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22ஆம் தேதி (தண்ணீர் தினம்), நவம்பர் 1 ஆம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இனி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் இல்லை: தில்லி அரசு!
அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.