காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர்ப் போக்கிகள் வழியாக வினாடிக்கு 53,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


