பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கு அபராதம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கழிவுகளைக் கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 9.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கழிவுகளைக் கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 9.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சாா்பில் மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க ‘சிங்கார சென்னை 2.0’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்படி, பொது, தனியாா் இடங்களில் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விதியை மீறி வரையப்பட்டுள்ள சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த விடங்களில் நமது கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பொது இடங்களில் குப்பை கொட்டிய நபா்கள் கண்டறியப்பட்டு ரூ. 5 லட்சத்து 2,000 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு ரூ. 3 லட்சத்து 53 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதேபோல், அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 455 போ் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 62 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில், பொதுமக்கள் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிா்த்து சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...